முதல்வர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்.


சென்னை, மே 11- சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று மாலை சந்திக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளிப்பார் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் ஜெயலலிதா, ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தெரிகிறது. பின்னர் வரும் 17-ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய மந்திரிகளும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதனிடையே வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வரும் கூட்டணி கட்சி தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் இன்று மாலை ஜெயலலிதா விடுதலையை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர்

Comments

all time Popular

RTGS Holidays 2015 by Resever Bank Of India