பாட்டுப் போட்டியில் வென்ற ஒரு கிலோ தங்கத்தையும் ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு வழங்கிய உயர்ந்த உள்ளம்


சென்னை, பிப்.21- விஜய் டி.வி. நடத்திய ’சூப்பர் சிங்கர் ஜுனியர்-4’ போட்டியின் இறுதிச் சுற்றில் ஈழத்தை சேர்ந்த ஜெசிக்கா என்ற மாணவி இரண்டாம் பரிசை வென்றார். இறுதி சுற்றில் ஈழத்தமிழரின் தேசிய கீதமாக போற்றப்படும் 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலை, ஊமை விழிகள் படத்தில் வரும் 'தோல்வி நிலையென நினைத்து' என்ற பாடலுடன் இணைத்து பாடிய ஜெசிக்கா இரண்டாம் இடத்தை பிடித்தார். அவருக்கு பரிசாக ஒரு கிலோ தங்கம் வழங்கப்பட்டது. இந்த ஒரு கிலோ தங்கத்தையும் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்குவதாக அந்த விழா மேடையில் அறிவித்ததன் மூலம் சிறிய உருவத்துக்குள் மறைந்திருக்கும் உயர்ந்த உள்ளத்தை ஜெசிக்கா உலகுக்கு வெளிப்படுத்தினார். இத்தகைய போட்டியில் பங்கேற்பதன் வாயிலாக பெற்ற வெற்றியைவிட எங்கள் மக்களின் (இலங்கை தமிழர்கள்) வலிகளை பதிவு செய்ததையே பெரும் வெற்றியாக கருதுவதாக தற்போது கனடாவில் வசிக்கும் ஜெசிக்கா நெகிழ்ச்சியுடன் கூறியபோது மேடையில் அமர்ந்திருந்த பிரபல சினிமா பின்னணிப் பாடகி சித்ரா மற்றும் இதர நடுவர்கள், பார்வையாளர்கள் உள்பட அனைவரும் கண்கலங்கிப் போயினர்.

Comments

all time Popular

RTGS Holidays 2015 by Resever Bank Of India