யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன? தனுஷ் போக்கால் தடுமாறும் இருவர்!
கொடுத்தவனே எடுத்துகிட்டாண்டி, வளர்த்தவனே கெடுத்துபுட்டாண்டி…’ என்றொரு பாடல் பழைய சினிமாவில் உண்டு. அந்த வரிகளை அப்படியே ரினுவல் செய்திருக்கிறார் தனுஷ். அதுவும் தன்னால் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயனுக்காக! அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய ‘காக்கி சட்டை’ திரைப்படம் பெரும் பொருள் வருமானத்துடன் வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டது. பசுவை ஓட்டிவிட்டதோடு நம்ம கடமை முடிஞ்சு போச்சு என்று இருந்துவிடுவது முறையாகாதல்லவா? ஆனால் இருந்துவிட்டாராம் தனுஷ்.
காக்கி சட்டையை பிப்ரவரி 12 ந் தேதி
வெளியிடுவதாக திட்டம். வாங்கிய எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் அதற்கான
வேலைகளை முடுக்கிவிட்டு பரபரப்பாக இயங்கி வந்தது. அதுவும் தனுஷிடம் ‘அந்த
தேதி உங்களுக்கு ஓ.கேதானே?’ என்று முன்கூட்டியே கேட்டுக் கொண்டு.
அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக தலையாட்டிய தனுஷ், அதற்கப்புறம் செய்ததுதான்
‘அகா சுகா’ பஞ்சாயத்து.
இன்னொருபுறம் அவர் நடித்துக்
கொண்டிருக்கும் அனேகன் படத்தை பிப்ரவரி 13 ந் தேதி வெளியிடுவதாக
சொன்னார்களாம். ‘இல்லைங்க… நான் தயாரிச்ச காக்கி சட்டை வருது. ஒரு வாரம்
தள்ளி வரலாமே?’ என்று சொல்வதுதானே நல்ல ஹீரோவுக்கு அழகு? ‘இருக்கட்டும்…
வரட்டும்… சந்தோஷம்…’ என்று கூறி அனேகனுக்கு பச்சைக் கொடி
காட்டிவிட்டாராம். ஒருவேளை காக்கி சட்டையை யாருக்கும் விற்காமல் தானே
ரிலீஸ் செய்யும் நிலைமை வந்திருந்தால் அவர் இப்படியொரு முடிவை
எடுத்திருப்பாரா என்று தனக்குள் பொசுங்கி, தன்னாலே அணைந்து கொண்டிருக்கிறது
சினிமா வட்டாரம்.
வளர்ந்த ஹீரோவா இருந்தாலும் சரி, வளரும்
ஹீரோவா இருந்தாலும் சரி, அறிமுக ஹீரோவா இருந்தாலும் சரி, எல்லார்க்கும் ஓர்
குணம். எல்லார்க்கும் ஓர் நிறை. இதுதாண்டா தமிழ்சினிமா!
முக்கிய குறிப்பு- இப்போ எப்படி சமாளிக்கப் போறாங்க? வேறு வழி… தள்ளிப் போகிறதாம் காக்கி சட்டை!
Comments
Post a Comment