“கத்தி, லிங்கா” சாதனையை முறிடியத்த 'ஐ'

‘ஐ’ படம் வெளியானதுமே விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் ‘ஐ’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றி பெருமையடித்துக் கொண்டனர். அதாவது ‘கத்தி, லிங்கா’ படங்களின் முதல் நாள் வசூலை ‘ஐ’ முறியடிக்கவில்லையாம். உண்மையிலேயே ‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது என்று சொன்னாலும் அது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், படத்தை வாங்கிய பெரும்பாலான வினியோகஸ்தர்களும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. ‘லிங்கா’ படம் பற்றி நாம் சொல்ல வேண்டாம். வினியோகஸ்தர்களே அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ‘லிங்கா’ படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பதும் தெரிந்து விடும்.


‘ஐ’ திரைப்படம் வெளிவந்து நேற்றுடன் 6 நாட்கள் முடிவடைந்து விட்டது. நேற்று வார நாள் ஆரம்பமானாதால் ‘ஐ’ படத்தின் வசூல் குறைந்து விடும் என்றும் சிலர் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நேற்றும் ‘ஐ’ படத்தின் வசூல் வார விடுமுறை நாட்களைப் போல் அமோகமாக இருந்ததாக திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

‘ஐ’ படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 170 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியிருக்கலாம் என்றும் சில கணக்குகளை திரையரங்க வட்டாரங்களில் கொடுக்கிறார்கள். கடந்த 6 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய், ஆந்திரா, தெலுங்கானாவில் 40 கோடி ரூபாய், கேரளாவில் 13 கோடி ரூபாய், கர்நாடகாவில் 10 கோடி ரூபாய், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 4 கோடி ரூபாய், ஹிந்தியில் 12 கோடி ரூபாய் என இந்தியாவில் மட்டும் 129 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் அமெரிக்காவில் 10 கோடி ரூபாய், ஐரோப்பா நாடுகளில் 5 கோடி ரூபாய், மற்ற உலக நாடுகளில் 25 கோடி ரூபாய் என 40 கோடி ரூபாய் ஆக மொத்தம் 169 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

மேற்சொன்ன இந்த வசூல் தொகை ‘ஐ’ படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை உள்ளடக்கியதாகும். ஒரு படத்தின் வசூல் முதல் நாளில் எப்படியிருக்கிறது என்பது பெரிய விஷயமில்லை, அது தொடர்ந்து வசூலை அள்ளி அனைவருக்கும் லாபத்தைக் கொடுக்கிறதா என்பதே அனைவராலும் கவனிக்கப்படும். கடந்த ஆண்டில் பல பெரிய படங்களை நம்பி வாங்கி ஏமாந்து போன வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ‘ஐ’ படம் லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும் போது யார் வேண்டுமானாலும் முன்னாடி போகலாம், ஆனால், யார் கடைசியில் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம்… எல்லாத்துலயும் ‘ஃபினிஷிங்’ முக்கியம் கண்ணா…

Comments

all time Popular

RTGS Holidays 2015 by Resever Bank Of India