விக்ரமுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

விக்ரமுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

 விஜய் நடிப்பில் கத்தி படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து தமிழில் வெளியான மெளனகுரு படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால், இவர் சோனாக்ஷியிடம் கால்சீட் கேட்ட நேரம். இந்த வருடம் முழுக்க நான் செம பிசி. அதனால் வேறு நடிகைகளை நடிக்க வையுங்கள் என்று எஸ்கேப்பாகி விட்டாராம்.

ஆனால், சோனாக்ஷியை மனதில் கொண்டு கதை பண்ணிய முருகதாசுக்கு அந்த ரோலில் வேறு நடிகையை நடிக்க வைப்பதில் விருப்பமில்லையாம். அதனால் சோனாக்ஷிக்காக காத்திருக்க முடிவு செய்து விட்டாராம். ஆனால், அந்த படததை இயக்குவதற்கு முன்பு தமிழில் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். கத்தி படத்தை முடித்த நேரத்தில் தனது முதல பட நாயகனான அஜீத்தை அடுத்து முருகதாஸ் இயக்கப்போவதாக செய்தி பரவியது. ஆனால், இப்போது அதுபற்றிய பேச்சு இல்லை. மாறாக, அஜீத் அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது.
இந்த நிலையில், விக்ரமுடன் கைகோர்க்க முடிவு செய்திருக்கிறாராம் முருகதாஸ். தற்போது தனது தயாரிப்பில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரமிடம் அவர் ஒரு கதையை சொல்ல, அது அவருக்கும் பிடித்து விட்டதாம். முக்கியமாக ஷங்கர் படம் மாதிரி தன்னை பிழிந்து எடுக்கும் விலலங்கமான கதை இல்லை என்பதால் டபுள் ஓகே சொல்லி விட்டாராம் விக்ரம்.

 

 

 

Comments

all time Popular

RTGS Holidays 2015 by Resever Bank Of India