'லிங்கா' – மொத்த வசூல் எவ்வளவு…?

டிசம்பர் மாதம் 12ம் தேதி வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் பொங்கலுக்கு சில புதிய படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து அனேக திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. சுமார் ஒரு மாதம் மட்டுமே முக்கி முனகி திரையரங்குகளில் ஓடிய ‘லிங்கா’ திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கும், திரையரைங்கு உரிமையாளர்களுக்கும் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. நஷ்டத் தொகையை திருப்பித் தர ரஜினிகாந்த் முடிவெடுத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது நஷ்டத் தொகையை திரையரங்க உரிமையாளர்களுக்கு மட்டும் திருப்பித் தர முடிவெடுத்திருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத் தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்பது இன்னும் சில நாட்களில்தான் தெரிய வரும். வினியோக வட்டாரங்களில் நாம்விசாரித்த வரையில் அவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த முதலீட்டைப் போட்டுத்தான் படத்தை வாங்கி வெளியிட்டார்களாம். தியேட்டர்காரர்களிடமிருந்து முழுமையான அட்வான்ஸ் மற்றும் எம்ஜி தொகையை அவர்களால் வசூலிக்க முடியவில்லையாம். அதனால், வினியோகஸ்தர்களுக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரும் நஷ்டம் வந்திருக்கிறது என்கிறார்கள்.

‘லிங்கா’ படத்தின் வசூல் மூலம் வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்த பங்குத் தொகை, அதாவது ‘ஷேர்’, சுமார் 28 கோடிதானாம். நஷ்டமான தொகை 37 கோடி ரூபாயாம். படத்தின் மொத்த வியாபார விலை 65 கோடி ரூபாயாம். வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த 37 கோடி ரூபாய் நஷ்டத் தொகை திரும்பக் கிடைக்குமா, கிடக்காதா என்பதுதான் தற்போதைய கேள்வி. ஒரு வேளை வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத் தொகை கிடைக்வில்லை என்றால் அவர்கள் அடுத்த கட்டப் போராட்டத்தில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

all time Popular

Easy SEO Tips & Tricks 2015 for Beginners – New SEO Techniques

Dunzo Charges for Delivery is Reduced for B2B Member

All Reliance 3G Tricks January 2015 for Free Internet